legend updated

'1700' பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு?'...'சென்னை ஊழியர்களின் நிலை?'... பிரபல நிறுவனம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 27, 2019 03:09 PM

வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக, நிசான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை நிசான் ஊழியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nissan to cut around 1700 jobs in India

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், நிறுவனத்தின் லாபம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக குறைந்தது. இதனால் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நிறுவனத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. இதனால் ஆறாயிரம் பணியாளர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நிசான் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை சென்னையில் உள்ள பணியாளர்களையும் பாதிக்கும் என தெரிகிறது. இதனால் சென்னை ஆலையில் பணியாற்றும் ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்படலாம்  எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. சர்வதேச அளவில் வாகன விற்பனை துறை தற்போது மந்த நிலையை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #NISSAN #MANUFACTURING #CHENNAI #RENAULT-NISSAN #JOBS