‘சகோதரிகள் செய்த காரியத்தால்..’ அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 04, 2019 08:02 PM

உத்தரப்பிரதேசத்தில் சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Cousin sisters in Varanasi marry against family wishes

உத்தரப்பிரதேசத்தின் ரொஹான்யா பகுதியைச் சேர்ந்த  சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்களுடைய இந்த முடிவைக் கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிவன் கோயிலுக்கு வந்த அந்தப் பெண்கள் அங்கிருந்த புரோகிதரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். அதைக் கேட்ட அவர் என்ன செய்வதெனத் தெரியாமல் திருமணம் செய்துவைக்க மறுத்துள்ளார். ஆனால் அங்கேயே அமர்ந்த பெண்கள் திருமணம் கொண்ட பிறகே கோயிலை விட்டுக் கிளம்பியுள்ளனர்.

இந்தச் செய்தி அப்பகுதியில் பரவக் கோயிலில் கூட்டம் கூடியுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்ட பெண்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுவே வாரணாசியில் நடைபெறும் முதல் தன்பாலின திருமணம் எனவும் கூறப்படுகிறது.

Tags : #SAMESEXMARRIAGE #COUSINS #SHOCKING