இளம்பெண்ணை கத்தியால் குத்தி இளைஞர் கொன்ற வழக்கு: விருத்தாசலத்தில் வலுக்கும் மாணவர் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 10, 2019 04:26 PM

கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞரின் செயலைக் கண்டித்து கடலூர் மாவட்டம,  விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியில்  கடையடைப்புப் போராட்டங்கள் வலுத்து வருகின்றனர்.

college students protest after youth killed young girl in vridhachalam

கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் என்கிற இளைஞரால் கொல்லப்பட்டதை அடுத்து, ஆகாஷ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த அந்த கல்லூரி மாணவியின் வீடு புகுந்து, ஆகாஷ் வாக்குவாதம் நிகழ்த்தியதாகவும் இறுதியில் அந்த வக்குவாதமே கொலையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

தனியார் கல்லூரியில் இருந்து படிப்பை பாதியில் விட்ட நிலையில், கல்லூரி படிக்கும் இந்த மாணவியின் வீட்டுக்குச் சென்ற ஆகாஷ் அவரிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கிய பின், ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்ததை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் இழப்பீடும், அரசு வேலையும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டமும் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #VRIDHACHALAM #CUDDALORE #GIRL #YOUNGSTER #PROTEST