'கமிஷனர் சார்'...'இவங்க என்ன ரொம்ப தொந்தரவு பண்றாங்க '...சென்னை ஆணையரிடம் புகார்?
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 25, 2019 12:01 PM
சென்னை ரசிகர்களால் தல என் அன்புடன் அழைக்கப்படும் தோனிக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தோனி மைதானத்திற்கு வந்தாலே போதும்,ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும்.அவரை காண்பதற்கே ரசிகர்கள் தவமாய் காத்து இருப்பார்கள்
தோனி பயிற்சியில் ஈடுபடும் போது அவரை காண்பதற்கு ரசிகர்கள் பலர் மைதானத்திற்குள் ஓடி வந்த நிகழ்வும் சமீபத்தில் நிகழ்ந்தது.அவ்வாறு ஓடி வந்த ரசிகர்களிடம் போக்கு காட்டி ஓடிய தோனியின் வீடியோகள் கூட வைரலாகியது.இதனிடையே தோனியின் சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருப்பதாக,பிரபல தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.
அதில் தோனி தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பிற்காக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து தோனியுடன் செல்ஃபி எடுக்கவும் போட்டோ எடுக்கவும் நிற்பதாகவும்,இது தனக்கு மிகுந்த இடைஞ்சலை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தப் புகார் காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அது தெற்கு மண்டல இணை ஆணையர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.எனினும் இந்த புகார் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.