5 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 22, 2019 10:54 AM
கர்நாடக மாநிலத்தின் தார்வார் நகரில் திடீரென ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. மேற்கொண்டு 11 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகத்தின் தார்வாரில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த புதிய 5 மாடி வணிக வளாகக் கட்டிடம் கடந்த செவ்வாய்க் கிழமை யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு உண்டானது. பலரையும் படுகாயத்துக்குள்ளாக்கிய இந்த கோர விபத்தில் சிலர் உயிரிழக்கவும் செய்துள்ள சம்பவம் பலரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதிலும் சோகம் என்னவென்றால், இந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் முதல் மாடி கட்டிமுடிக்கப்பட்டிருந்ததால், அங்கு இயங்கிக் கொண்டு வந்த கணினி பயிற்சி மையமும் அங்கு பயில வந்த மாணவிகள், பணியாளர்கள் என 100 பேர் இந்த விபத்தில் சிக்கினர். இதில் 2 பேர் விபத்து சம்பவத்தின்போதே தீயணைப்புத் துறையினரால் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 2-வது நாள்வரை மீட்புப் பணிகள் நடந்துவந்த நிலையில், 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு, தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்து பெரும் சோகத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது. எனினும் மேலும் 11 பேரை காணவில்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்துவருவதோடு, காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.