'பெண் அதிகாரிக்கு'...தனது அலுவலகத்திலேயே நிகழ்ந்த கொடூரம்...'நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 01, 2019 08:49 AM

உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு, போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல அதிகாரி தனது அலுவலகத்திலேயே சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A drug inspector was shot dead in her office in Punjab

பஞ்சாபில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் மண்டல அதிகாரியாக செயல்பட்டு வருபவர் நேஹா ஷோரி.இவர் தனது அலுவலகத்தில் வழக்கம் போல தனது பணிகளை கவனித்து கொண்டிருந்தார்.அப்போது அவரது அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர், நேஹாவை 2 முறை தான் வைத்திருந்த துப்பாக்கியால்  சரமாரியாக சுட்டார்.இந்த தாக்குதலால் நிலைகுலைந்த பெண் அதிகாரி நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண் அதிகாரி நேஹாவை சுட்ட நபர் தன்னையும்  துப்பாக்கியால் சுட்டு கொண்டார்.இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.அங்கு அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண் அதிகாரி நேஹா ஷோரி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.சண்டிகர் அருகேயுள்ள கரார் என்ற நகரில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Tags : #ATTACKED #DRUGS #DRUG INSPECTOR #PUNJAB #NEHA SHORIE #DRUG AND FOOD CHEMICAL LABORATORY