'கூட்டத்தில் தவறாக நடக்க முயன்ற இளைஞர்'...கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 11, 2019 04:06 PM

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில்,தலைவர்களின் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Actress Khushbu slaps youth during Congress rally in Bengaluru

இதனிடையே கர்நாடகாவிலுள்ள, மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வாக்கு சேகரித்தார்.பிரச்சாரத்தை முடித்து விட்டு தனது காரை நோக்கி குஷ்பு சென்றார்.அப்போது திடீரென ஆவேசமடைந்த குஷ்பு பின்னால் திரும்பி இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.

கூட்டநெரிசலில் பின்னால் வந்த இளைஞர் குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாலேயே அவர் அறைந்ததாக கட்சி நிர்வாகிகள் விளக்கம் தெரிவித்தனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.