கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. எரித்து, தொங்கவிடப்பட்ட துயரச் சம்பவம்.. புதிய திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 20, 2019 03:00 PM

கர்நாடகாவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

karnataka engineering student raped burnt hung from tree

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில், கடந்த 16-ம் தேதி மரத்தில் தொங்கிய ஒரு இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் போலீசாரின் விசாரணையில், அது கடந்த 13-ம் தேதி மாயமான தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது பாத்ரா என்ற மாணவியின் உடல் என்பது தெரியவந்தது.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் தற்கொலை எனக் கூறப்பட்டது. பின்னர், நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் மது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் எரிக்கப்பட்ட மாணவி மதுவின் உடலை, மரத்தில் தற்கொலை செய்துகொண்டதுபோல் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர் குற்றவாளிகள். மதுவை கொலை செய்வதற்கு முன்னர், தற்கொலை செய்துகொள்வதுபோல் ஒரு கடிதத்தை எழுத, குற்றாவளிகள் துன்புறுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தனக்கு படிப்பில் கவனம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதிவைக்க மாணவி, மது வற்புறுத்தப்பட்டுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  ஆனால் மது நன்றாக படிக்கக் கூடியவள் என்பதால், மாணவி மது தற்கொலை செய்துக்கொண்டார் என்பதை, அவரது குடும்பத்தார் மற்றும் சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாணவி கொல்லப்பட்ட சம்பவம்  தொடர்பாக இணையதளத்தில் பலர் விவாதிக்க, அம்மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும்  பரவியுள்ளது.

இது மட்டுமல்லாமல் 50 ஆயிரம் பேர் மதுவிற்கு நீதிகேட்டு கையெழுத்து இயக்கத்தையும் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிவிட்டரில் #JusticeForMadhu என்ற ஹேஷ் டாக்  டிரெண்டாகி வருகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்றவாளி ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #KARNATAKA #STUDENT #HARRASHMENT #BURNT #MADHU