‘செல்ஃபி எடுக்க முயன்ற நபர்’..‘தூக்கி வீசிய கோயில் யானை’.. பரபரக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Mar 21, 2019 03:48 PM
கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கோயில் யானை தூக்கி வீசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய இணைய சூழலில் ஸ்மாட் போன்கள் இல்லாதாவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கும் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களில் மூலம் எடுக்கப்படும் செல்ஃபி மோகம் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இது சில நேரங்களில் ஆபத்தையும் விளைவிக்கிறது. இந்நிலையில் கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கோயில் யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரவக்காடு என்னும் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி கோயிலில் இரு யானைகள் கட்டப்பட்டுள்ளன. அதில், ஒரு யானையுடன் செல்ஃபி எடுக்க எண்ணி செல்போனுடன் நபர் ஒருவர் யானையின் அருகே சென்றுள்ளார். இதனை கண்ட கோயில் யானை அந்த நபரை தூக்கி வீசுகிறது.
மீண்டும் கோயில் யானை அந்த நபரை தாக்க முயல்கிறது. இதனைக் கண்ட பாகன் மற்றும் பொதுமக்கள் யானையிடமிருந்து அந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து விசாரித்ததில் யானையால் தாக்கப்பட்ட நபர் புன்னப்ரா குன்னம்பள்ளி என்னும் பகுதியைச் சேர்ந்த ரனீஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் படமெடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.