'ரயில்' மீது ஏறியவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 25, 2019 04:09 PM

ரயிலின் உயர் மின்னழுத்த கம்பியில் கை வைத்ததால்,இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு மரணமடைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man touches livewire at railway station in Bengaluru

பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென ஏறிய இளைஞர் ஒருவர்,தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.உடனே அருகில் இருந்தவர்கள் கீழே இறங்குமாறு அந்த இளைஞரை வற்புறுத்தினர்.ஆனால் அவர் அதனை கேட்காமல் ரயிலின் கூரையில் மீது நின்று கொண்டிருந்தார். அவருக்கு மேலே உயர் மின்னழுத்த கம்பிகள் சென்று கொண்டிருந்த போதும் ஆபத்தை உணராமல் அவர் மேலே நின்று கொண்டிருந்தார்.

இதனிடையே யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென உயர் மின்னழுத்த கம்பியில் கைவைக்க,அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அந்த இளைஞரின் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மின்சாரம் பாய்ந்து இளைஞர் தூக்கி வீசப்படும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.