‘மோதல் எல்லாம் அங்க மட்டும்தான்’... ‘கண்டிப்பாக இதுக்கு அவங்களை கூப்பிடுவேன்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 06, 2019 01:18 PM

இந்திய அணி வீரர்களும், தனது திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாக பாகிஸ்தான்  வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

Will invite Indian cricket stars, says Pakistan pacer

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி, 2016-ம் ஆண்டு சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். இதையடுத்து அடுத்த ஆண்டுலேயே, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில், தொடர் நாயகன் விருது பெற்று, கிரிக்கெட் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சாமியா என்பவரை வரும் 20-ம் தேதி துபாயில் காதல் திருமணம் புரிய உள்ளார்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, ‘என்னுடைய திருமணம் துபாயில் நடந்தாலும், அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்திய அணி வீரர்களை நான் எதிர்பார்க்கிறேன். மேலும் நான் கண்டிப்பாக இந்திய வீரர்களுக்கு என்னுடைய திருமண அழைப்பை விடுப்பேன். இந்திய அணி வீரர்களில் யாரை திருமணத்திற்கு அழைக்கவுள்ளார் என்பது குறித்து, எதையும் தெரிவிக்காத ஹசன் அலி, எனினும் அவர்கள் தனது திருமணத்தில் கலந்துகொண்டால் பெரும் மகிழச்சியடைவேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். துபாயில் இடம்பெறவுள்ள திருமண நிகழ்விற்கு இந்திய வீரர்கள் வரவேண்டும் என நான் விரும்புகின்றேன், அது சிறப்பான மகிழ்ச்சிகரமான  விஷயமாக அமையும் எனவும் தெரிவித்துள்ள ஹசன் அலி, மோதல் என்பது ஆடுகளத்தில் மட்டும் தான். ஆடுகளத்திற்கு வெளியேயில்லை. நாங்கள் தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் நாங்கள் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #PAKISTAN #HASSANALI #SHAMIA ARZOO #WEDDING