'2 மனைவியும் கூட இல்ல'... 'ஜெயிலுக்கு போனா மூன்று வேளை சாப்பாடு போடுவாங்க'... இளைஞர் செஞ்ச அதிர்ச்சி செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ் குமார். இவருக்குத் திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், இருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் சந்தோஷ் குமார் சாப்பாட்டிற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்க வேண்டும், அது சிறையில் நிச்சயம் கிடைக்கும் என முடிவு செய்த சந்தோஷ் குமார் அதற்காக ஒரு திட்டம் போட்டார்.

அதனடிப்படையில் நேற்று காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட அவர், ஈரோடு மணிக் கூண்டு, ஈரோடு ரயில் நிலையம் ஆகிய இடங்களில் குண்டு வெடிக்கும் எனக் குறிக்கொண்டு தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் உஷாரான போலீசார் மேற்கண்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டார்கள். தீவிர சோதனையின் முடிவில் அது புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் வந்த தொலைப்பேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த சந்தோஷ் குமாரி கைது செய்தனர்.
மூன்று வேளையும் சிறையில் சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக இப்படிச் செய்ததாக காவல்துறையிடம் சந்தோஷ் குமார் கூறியுள்ளார். இதற்கிடையே ஏற்கனவே இதுபோன்று ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு சந்தோஷ் குமார் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
