'காசியிடம் சிக்கிய சென்னை டாக்டர் மற்றும் பேராசிரியை'... 'எங்கள இப்படி தான் சீரழித்தான்'... 'எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு'... திருமணமான பெண்கள் சொன்ன பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் காசி வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில், தோண்டப் தோண்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
பார்ப்பதற்குக் கட்டுமஸ்தான உடல், வசீகரிக்கும் பேச்சு. இது தான் நாகர்கோவில் காசியின் மூலதனம். சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் காசி அதன் மூலம் பல பெண்களிடம் பழகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாகப் பழக ஆரம்பிக்கும் காசி, தனது பேச்சால் அந்த பெண்களிடம் தான் மிகவும் நல்லவன் என்ற இமேஜை உருவாக்குவார். ஒரு கட்டத்தில் உங்களை காதலிக்கிறேன் என்று கூறி அந்த பெண்களின் அன்பைப் பெறும் காசி, அதன்பின்பு தான் தனது உண்மையான ஆட்டத்தை ஆரம்பிப்பார்.
உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், உன்னைத் தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி தனது வலையில் சிக்கிய பெண்களிடம் தனிமையிலிருந்து கொண்டு அதை வீடியோவாக எடுத்துப் பல லட்சம் பணத்தைக் காசி கறந்துள்ளார். பல பெண்களை இதுபோன்று காசி சீரழித்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காசி கைது செய்யப்பட்டார். காசி மீது ஏற்கனவே 6 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் புதிதாகப் புகார் ஒன்றை அளித்தார்.
அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் காசி மீது பலாத்கார வழக்குப் பதிந்து, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்கள், போட்டோக்களை சைபர் க்ரைம் சிறப்பு குழு மீட்டது.அதில் போலீசார் மலைத்துப் போகும் அளவுக்கு 1000த்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. காசியிடம் பெங்களூர், மும்பை, நெல்லை, கடலூர், சென்னை மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் சிக்கியுள்ளனர். இதில் சென்னை, மும்பை, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவிகளும் அடங்குவர்.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியை ஒருவரும் காசியின் வலையில் சிக்கியுள்ளார். காசியிடம் இருந்த பெரும்பாலான ஆபாச வீடியோகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் காசியுடன் சேர்ந்து இருப்பது போல் இல்லாமல், அவர்கள் காசியின் வற்புறுத்தலுக்கு இணங்க தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்து காசிக்கு அனுப்பியுள்ளார்கள். இதைத் தான் தன்னுடைய ஆயுதமாக வைத்துக்கொண்டு காசி பல பெண்களைச் சீரழித்ததோடு, அதை வைத்தே பல லட்சம் பணத்தைக் காசி சுருட்டியுள்ளார். இதனிடையே அந்த வீடியோகளில் உள்ளவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிப்பது தொடர்பாகக் காசியிடம் விசாரணை நடந்தது.
அந்த விசாரணையின் அடிப்படையில் காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெமரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்துள்ளன. இதில் பல எண்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசியின் தொடர்பிலிருந்த செல்போன் எண்களில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல அதிர்ச்சி தகவல்களை அந்த பெண்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களை பெரும்பாலும் காரில் வைத்தே காசி சீரழித்துள்ள தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே காசியில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரைத் தொடர்பு கொண்ட சிபிசிஐடி போலீசார், தைரியமாகப் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் எங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது, அதனால் புகார் எதுவும் வேண்டாம் என போலீசாரிடம் கதறி அழுதுள்ளார்கள். காசி வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.