"'வேர்ல்ட் கப்', 'ஐபிஎல்'ன்னு பட்டைய கெளப்புனவரு.." இப்போ 'பஸ்' டிரைவரா வேல பாத்துட்டு இருக்காரு..." 'பிரபல' வீரருக்கு வந்த 'சோதனை'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், சர்வதேச அணியில் இடம்பிடித்திருந்த வீரர் ஒருவர், தற்போது பஸ் டிரைவராக பணிபுரிந்து வரும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. இதன் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொண்டிருந்த நிலையில், அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்திவ் (Suraj Randiv) இடம்பெற்றிருந்தார்.
இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சுராஜ் ரந்திவ் தவிர, மற்றொரு இலங்கை வீரரான சிந்தக ஜெயசிங்கா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த வாடிங்டன் மவேங்கா ஆகியோரும் இதே பணியைச் செய்து வருகின்றனர். மூன்று பேருமே, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டிரேன்ஸ்தேவ் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த மூவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் நிலையில், தங்களின் வாழ்வாதாரத்திற்காக பஸ் டிரைவர் பணியை செய்து வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சுராஜ் ரந்திவ் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர், 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே, சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் பயிற்சியில் உதவ, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக அவர் சென்று உதவியதாகவும் சுராஜ் ரந்திவ் தெரிவித்துள்ளார்.