'வீட்ல அம்மா, அப்பா இல்லாத நேரமா பார்த்து...' 'தங்கச்சியோட கைகால்களை கட்டிப்போட்டு ...' அண்ணன் செய்த அதிர்ச்சிக் காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வில்லிவாக்கத்தில் தங்கையின் கைகால்களை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் சிறுவன் (15) அவரது தங்கை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தாயும், தந்தையும் வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு, தங்கையின் கைகால்களை கட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் பல முறை இவ்வாறு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளித்தோழியிடம் முதலில் தெரிவித்துள்ளார். தோழி மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து அவர்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சிறுவனை கைது செய்து காப்பகத்திற்கு கொண்டு சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவன் வைத்திருந்த செல்போனில் இது தொடர்பாக வீடியோ பதிவு எதுவும் உள்ளதா எனவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
