'டாக்டர்கள் மீது எச்சில் துப்பியதாக புகார்...' 'அவங்க பண்றது மன அழுத்தம் தருது, அதனாலதான்...' கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 நோயாளிகளின் மீது திருச்சி அரசு மருத்துவமனை போலீசாரிடம் புகார் அளித்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வார்டில் இருக்கும் தில்லைநகரை சேர்ந்த ஒருவரும், உறையூரை சேர்ந்த ஒருவரும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் பணிகளை செய்யவிடாமல் ரகளை செய்வதாகவும், வைரஸ் பாதித்த அவர்கள் தங்களின் மாஸ்க்களை கழற்றி அங்கு பணிபுரிய வருபவர்களின் மீது எச்சை துப்ப முயற்சிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதிரி தொற்று நோய் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வீதம் செயல்பட்டால் அவர்களின் மீது கொலைமுயற்சி வழக்கம் பதிவு செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியரிடம் நோயாளிகள் பேசும் பொழுது நீங்கள் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்யாமல் எங்களையும், எங்கள் குடும்பத்தையும் தனிமைப்படுத்தி சோதனை செய்கிறீர்கள். அப்பகுதியில் எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைப்பது போன்று நடந்துக்கொள்வது எங்களுக்கு மிகவும் மன அழுத்தத்தைத் தருகிறது அதனால்தான் நாங்கள் இப்படி நடந்து கொண்டோம் என ஒத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
