'விபரீதத்தைப்' 'புரிந்து கொள்ளவில்லை...' 'தலைமுடியிலும்' கொரோனா வைரஸ் 'வாழும்!...' மருத்துவர்களின் 'ஷாக் ரிப்போர்ட்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 27, 2020 05:17 PM

கொரோனா வைரஸ் தலைமுடியுலும் வாழும் தன்மை படைத்தது என்ற தகவலை மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Coronavirus virus lives in the hair-Doctors shock Report

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்ததையடுத்து, 21 நாட்கள் உலகின் மிக நீண்ட ஊரடங்கு உத்தரவை இந்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாட்டில் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

லட்சக்கணக்கானோரை இந்த வைரஸ் பாதித்து விட்டால், அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கக் கூடிய அளவுக்கு போதிய வசதி இங்கு இல்லை என்பதே உண்மை. இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற நிலையிலேயே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் என்னும் அரக்கனை விரட்ட, அரசோடு மருத்துவர்களும், செவிலியர்களும் காவல்துறையும் இணைந்து, இரவு பகலாகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். .

இதன் வீரியம் புரியாமல் மக்கள் எல்லோரும் சர்வசாதாரணமாக வலம் வந்து கொண்டிருப்பதாக கூறும் மருத்துவர்கள், மூகமூடி போட்டுக் கொண்டால் வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம் என நினைப்பது தவறு எனக் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் அட்டைப் பெட்டி முதல் கடினமான இரும்பிலும்கூட ஏன் நம் தலை முடியிலும்கூட தங்கிவாழும் தன்மையுடையதாக இருப்பதாக கூறுகின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், அரசு எவ்வளவு கடுமையான சட்டங்கள் போட்டாலும் எதையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது சரியா?  என கேள்வி எழுப்புகின்றனர். உங்களுக்கு பாதித்தால், உங்கள் குடும்பத்திற்கே எதிரொலிக்கும். என்பதை புரிந்து கொண்டு யோசித்து செயல்படுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Tags : #CORONA #DOCTORS #SHOCK REPORT #VIRUS LIVE IN HAIR