'டைட்டானிக் பட ஸ்டைலில்...' 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்களுக்காக... 'இசைக்கலைஞர்' செய்த 'நெகிழ்ச்சி செயல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்டைட்டானிக் படத்தில் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் போது இசைக்கலைஞர் இசை நிகழ்ச்சி நடத்தியது போல், தென்கொரியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆறுதல் அளிக்கும் விதமாக இசைக்கலைஞர் ஒருவர் இசை நிகழ்ச்சி நடத்திய நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவில் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள மக்கள் ரசிக்கும் விதமாக வயலின் இசைக்கலைஞரான வோன் ஹியூங் ஜூன் என்பவர் தனது வீட்டில் இருந்தப்படி, பாரம்பரிய வயலின் இசையை மீட்டி அதனை சமூகவலைதளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிப்பரப்பி வந்தார்.
இதனை கண்ட தென்கொரியாவின் மியோங்ஜி மருத்துவமனையில் கலை மற்றும் குணப்படுத்தும் மையத்தின் ஊழியரான லீ சோ யங், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோருக்கு இசை நிகழ்ச்சி நடத்த முடியுமா என வோன் ஹியூங் ஜூனிடம் கேட்டுள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட இசைக்கலைஞரான வோன் ஹியூங் ஜூன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்காக மட்டும் தனது குழுவினருடன், அவர்கள் சிகிச்சை பெறும் அறையின் வெளியே சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்கியுள்ள 3 பேரும் வயலின் இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்தனர். கொரோனாவால் உடல் மற்றும் மனதளவில் துவண்டு போயிருந்த அவர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில், ஆவ் மரியா இசை தொகுப்பை அவர்கள் இசைத்தனர். உலகளாவிய பிரச்னையான கொரோனாவை ஒன்றிணைந்து வெல்ல முடியுமென்பதை காட்டவே இதனை ஏற்பாடு செய்ததாக மருத்துவமனை ஊழியரான லீ சோ யங் தெரிவித்தார்.
வோன் ஹியூங்கின் இசையே கேட்ட போது, தாங்கள் மிகுந்த ஆறுதலாக உணர்ந்ததாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தினர் தெரிவித்தன்ர.
