தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கையானது 969 இதனால் உயர்ந்தது.

இதில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் மேலும் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.
Tags : #CORONA #CORONAVIRUS
