'கொரோனா வார்டில் டிக்டாக்...' செல்போன் யூஸ் பண்ணின 3 பேரையும் டிஸ்மிஸ் பண்ணியாச்சு, அதுமட்டுமில்ல...' அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 29, 2020 11:33 AM

கொரோனா வைரஸ் பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் போனில் மருத்துவ தூய்மை பணியாளர்கள் டிக்டாக் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Dismissal of employees who tiktok videos of corona ward

கொரோனா வைரஸ் பாதித்த 25 வயது பெண் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணின் போனிலிருந்து டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருத்துவமனையில் பணியாற்றிய 2 பெண் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் வேறொரு பெண்ணும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் செல்போன் உபயோகித்த மூவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதித்த பெண் உபயோகித்த செல்போனை இவர்களும் உபயோகித்ததால் இந்த மூவரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #ISOLATION #TIKTOK