'போன் பண்ணினா எடுக்கல...' 'செல்போன் சிக்னல் வச்சு டிராக் பண்ணிருக்கோம்...' தனிமைப்படுத்தப்பட்ட துணை ஆட்சியர் கேரளாவில் இருந்து தப்பியோட்டம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 27, 2020 08:10 PM

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட துணை ஆட்சியர் அனுபம் மிஷ்ரா, தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், வீட்டிலிருந்து தப்பிச் சென்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The escape of isolated sub collector has caused controversy

சமீபத்தில் சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்று விட்டு நாடு திரும்பியிருந்தார். எனவே அவரை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரின் அரசுக் குடியிருப்பில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் மார்ச் 19-ம் தேதி அன்று உத்தரவிட்டது.

அனுபம் மிஷ்ரா போடப்பட்டிருந்த உத்தரவை மீறி தன் வீட்டிலிருந்து மாவட்ட நிர்வாகத்திடம் எந்த தகவலையும் அளிக்காமல் தப்பிச் சென்றுவிட்டார். தொடர்ந்து போலீசார் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. செல்போன் இருப்பிடத்தை தற்போது டிராக் செய்து அவர் கான்பூரில் உள்ளார் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில், கான்பூரில் தன் சொந்த வீட்டில் இருப்பதாக அனுபம் மிஷ்ரா ஒப்புக்கொண்டார். மார்ச் 23-ம் தேதி நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே தாம் கேரளாவிலிருந்து வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அனுபம் மிஷ்ரா மீது பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படியாமை), 269 (கவனக்குறைவாக உயிருக்கு ஆபத்தான நோயைப் பரப்புதல்) மற்றும் 271 (தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமை) என மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ISOLATION