'அவசர உதவிக்கு மட்டும் அழைக்கலாம்...' 'சென்னையில் மருத்துவ உதவி, இறப்பு, இன்னும்...' அவசர உதவி எண்ணை அறிவித்தது தமிழக காவல் ஆணையம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 29, 2020 11:04 AM

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்பவர்களுக்காக அவசர உதவி எண்களை தமிழக காவல் ஆணையம் அறிவித்துள்ளது .

The Police announced an emergency number for essential needs

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தமிழக எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. அவசர தேவைகளை தவிர வீடுகளில் இருந்து வெளியே வரும் நபர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதோடு, பல வினோத தண்டனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறை சார்பில் அவசர தேவைகளுக்கு உதவும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மிக அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே இந்த தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையே அல்லது வெளி மாநிலங்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பயணிக்க விரும்புபவர்கள் இந்த தனி கட்டுப்பாட்டு அறையினை அணுகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

75300 01100- என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது gcpcorona2020@gmail.com. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேலும் வெளியே பயணிக்க விரும்புபவர்கள் அனுமதி சீட்டுடன் பயணிக்க வேண்டும். அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

Tags : #HELPLINE