'நீங்கள் அதிகாரிகளை தேடி போக வேண்டாம்'... 'மக்கள் குறைகளை கேட்க மக்களை தேடி வரும் அதிகாரிகள்'... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு அதிகாரியைத் தேடி மக்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், 1100 ல் புகார் அளிக்கலாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்ட மன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குத் திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர், ''நவீன விஞ்ஞான உலகத்தில் பொது மக்கள் எளிதில் தங்களின் குறைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் 1100 என்ற எண் மூலம் செல்போன் மூலம் குறைகளைத் தெரிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு இதுவரை 55 ஆயிரம் புகார்கள் வந்திருப்பதாகவும், அதிமுக அரசு நிச்சயம் அதை நிறைவேற்றுவோம் எனவும் உறுதியளித்தார். மேலும் தனது தலைமையிலான 4 ஆண்டுக் கால அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியோடு தற்போதுள்ள ஆட்சியை ஒப்பிட்டுப் பாருங்கள் எனப் பேசிய முதலமைச்சர், தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டத்தின் 4 ஆம் கட்ட பணி தற்போது நடைபெற்று வருவதாகக் கூறி, பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டுக் காட்டினார்.

மற்ற செய்திகள்
