'ஊரடங்கு உத்தரவுனால... சாப்பாடு இல்லாம யாரும் கஷ்டபடக்கூடாது!'... புதுக்கோட்டை விவசாயி செய்த பிரம்மிக்கவைக்கும் செயல்!... வீடு வீடாக நடத்திய அற்புதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 29, 2020 03:02 PM

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதுக்கோட்டையில் மூர்த்தி என்ற விவசாயி, வீடு வீடாக சென்று 1 டன் அளவிலான காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

pudukottai farmer supplies vegetables to every household

உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துவிட்டது. இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அத்திவாசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இயற்கை விவசாயியான மூர்த்தி என்பவர் தனது வயலில் விளைந்த மற்றும் கடைகளில் வாங்கிய புடலங்காய், பீக்கங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 1000 கிலோ எடையுள்ள காய்கறிகளை புதுக்கோட்டை காந்திநகர் பகுதிக்கு சென்று வீடு, வீடாக இலவசமாக வழங்கினார்.

இதுகுறித்து மூர்த்தி கூறும்போது, "நான் ஒரு விவசாயி என்பதால், பொதுமக்கள் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்க எண்ணினேன். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே, நான் காய்கறிகளை வாங்கி வந்து பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.

 

Tags : #CORONA #CORONAVIRUS #PUDUKOTTAI #FARMER