சூப்பராக மாறப் போகும் சென்னை புறநகர்! அமையப் போகும் வேறலெவல் வசதி.. மாஸ்டர் பிளான் ரெடி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : 62 கி.மீ தூரம் கொண்ட ஓஆர்ஆர் சாலை பகுதியில் அமைய போகும் வசதி குறித்து, பிரபல அமெரிக்க நிறுவனம் ஒன்று, பரிந்துரையை செய்துள்ளது.
ஊரப்பாக்கம் தாண்டி வண்டலூர் வழியாக மீஞ்சூர் வரை, சுமார் 62 கி.மீ தூரத்திற்கு ஓஆர்ஆர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் அனைத்து பணிகளும், கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் முழுமையாக வந்தது.
சென்னை நகரத்திற்குள் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடு கட்டும் நோக்கில் தான், ஓஆர்ஆர் சாலை உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, பல இடங்களில், வாகன நெரிசல் குறைந்து, பொது மக்கள் தகுந்த நேரத்தில் சென்று வரவும் உதவியாக அமைந்துள்ளது.
ஐந்து பரிந்துரைகள்
இந்நிலையில் தான், ஓஆர்ஆர் சாலையில், பெரிய நிறுவனங்கள், கடைகள், திரையரங்குகள், விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட பலவற்றை அமைக்க அமெரிக்காவின் CBRE நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மாஸ்டர் பிளான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல கமர்சியல் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த பரிந்துரையின் படி, 62 கி. மீ தூரத்திற்கு சாலையின் இரண்டு பக்கங்களிலும், பல்வேறு கமர்சியல் அமைப்புகள், பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சேவைகளை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில், 5 பரிந்துரைகளை இந்த நிறுவனம் செய்துள்ளது.
சென்னையில் வேண்டும்
இதன் முதற்கட்டமாக, ஓஆர்ஆர் சாலை பகுதியில், பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் பகுதியில் உருவாக்கப்பட்ட அவுட்டர் ரின் ரோட் கமர்சியல் ஹப் போன்று, சென்னையிலும் உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐ.டி நிறுவனங்கள், உற்பத்தி மையங்கள் ஆகியவை அங்கு கொண்டு வரவும் இந்த பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள திட்டங்கள்
அது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் CBRE நிறுவனங்கள் கொண்டு வந்த சில திட்டங்களை சென்னை ஓஆர்ஆர் பகுதியில் கொண்டு வரவும் திட்டங்கள் போடப்பட்டுள்ளது. எதிர்கலாத்தை கருத்தில் கொண்டு, சில வல்லரசு நாடுகளைப் போல, சென்னையின் பகுதியை வடிவமைக்க வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி, ரேஸிங் யூனிட் ஒன்றை உருவாக்கி, சென்னையில் உருவாக்கப்படும் கார்களை இங்கேயே டெஸ்ட் செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்
மெட்ராஸ் மோட்டார் கிளப், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு அமைப்பு, தேசிய சாலை அமைப்பு, மாநில சாலை கார்ப்பரேஷன் சென்னை பெருநகர சாலையே கார்ப்பரேஷன் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, இந்த பரிந்துரை ரிப்போர்ட்டை அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. சென்னையின் ஓஆர்ஆர் சாலை பகுதியில், பெரிய அளவில் முன்னேறவில்லை என்றும், அந்த பகுதிகளில் புதிய நிறுவனங்களைக் கொண்டு வந்து, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் CBRE நிறுவனம் கூறியுள்ளது.
பிரேசில், போர்ட்லாண்ட், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில், இந்த நிறுவனம் சில பகுதிகளை கட்டமைக்க காரணமாக இருந்துள்ளது. தற்போது அதே நிறுவனம் தான், சென்னையின் ஓஆர்ஆர் சாலையில், சில கட்டமைப்பு வசதிகளை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.