அஸ்வின், ஆனந்த் மஹிந்திராவை வியக்க வைத்த ‘சென்னை’ ஆட்டோ டிரைவர்.. ‘இவரை பார்த்து காத்துக்கணும்’.. பாராட்டி ரெண்டு பேரும் போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட் செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, தனது ஆட்டோவில் இலவச வை-பை, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப் என பயணிகளைக் கவர பல வசதிகளை வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆட்டோவுக்கு உள்ளேயே சிறிய குளர்சாதனப்பெட்டி, சாக்லேட் உள்ளிட்டவற்றையும் வைத்துள்ளார்.
மேலும் பணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஸ்வைப்பிங் மிஷன் வசதியும் வைத்துள்ளார். அன்னையர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய நாளில் தள்ளுபடி விலையில் ஆட்டோ சவாரி செய்கிறார். அதுமட்டுமல்ல, இவரது ஆட்டோவில் ஆசிரியர்கள் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம். அதற்கு காரணம் உலகிலேயே ஆசிரியர் பணிதான் சிறந்த சேவை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகிய முன்களப்பணியார்களுக்கும் இலவச ஆட்டோ சேவை வழங்குவதாக அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மத்தியில், அண்ணாத்துரையின் ஆட்டோவில் செல்லவேண்டும் என வாடிக்கையாளர்கள் காத்திருந்து செல்கின்றனர். அந்த அளவிற்கு தனது ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களிடம் அவர் கனிவாக நடந்து கொள்கிறார். 12-வது வரை மட்டுமே படித்திருக்கும் அண்ணாதுரை, வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து மைக்ரோசாப்ஃட், கூகுள், ஹெச்பி உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து பேச அழைப்பு வந்துகொண்டுள்ளது.
The Better India, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையிடம் இதுதொடர்பாக நேர்காணல் மேற்கொண்டுள்ளது. இதைப் பார்த்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘MBA படிக்கும் மாணவர்கள் இவருடன் ஒரு நாள் இருந்தால் போதும், எப்படி வாடிக்கையாளர்களை என்பதை கற்றுக்கொள்ளலாம். இவர் ஆட்டோ ஓட்டுநர் மட்டும் கிடையாது. ஒரு பேராசியர்’ என பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
If MBA students spent a day with him it would be a compressed course in Customer Experience Management. This man’s not only an auto driver… he’s a Professor of Management. @sumanmishra_1 let’s learn from him… https://t.co/Dgu7LMSa9K
— anand mahindra (@anandmahindra) January 22, 2022
அதேபோல் தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணியின் முன்னாணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின், அண்ணாதுரையை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், ‘நம்பவே முடியவில்லை. தொடச்சியாக இவரை பார்த்து வருகிறேன், தொழில் மீது இவர் வைத்திருக்கும் மரியாதையை எல்லோரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். ‘வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தில்தான் நான் சாப்பிடுகிறேன், அவர்கள் எனக்கு முதல் கடவுள்’ என அண்ணாதுரை உருக்கமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
Unbelievable 👏👏. Been following him for a while and his respect towards the trade is something everyone should learn from🤩🤩 https://t.co/QQcFq3A0qp
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) January 22, 2022