'மருந்து இல்ல; ஆனா நோய் எதிர்ப்புச் சக்திக்காக இத குடிங்க!’.. 'அரசே வழங்கும்!'.. முதல்வர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 23, 2020 03:44 PM

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘ஆரோக்கியம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Covid19 TN CM Palaniswamy Suggestes Kabasura kudineer Arokyam Scheme

இதனை அடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சிகிச்சை பெற்ற பின் மக்கள் உடல் நலத்தை பேண ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதுபற்றி பேசிய அவர், கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என்று கூறியதோடு, அதே சமயம் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான எதிர்ப்பு சதிக்காக மட்டுமே அன்றி, மருந்து அல்ல என்றும் தெரிவித்தார்.