கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை, அவரின் 1 வயது குழந்தை பரிதாப பலி..! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 09, 2019 01:27 AM

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீராங்கனை கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

South Africa women cricketer Elisa theunissen Fourie died car crash

25 வயது கிரிக்கெட் வீராங்கனையான எலிசி தியுனிசன், தென் ஆப்பிரிக்க அணியில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவர் பங்கேற்றுள்ளார். இதனை அடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அணியில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கார் விபத்து ஒன்றில் எலிசி தியுனிசன் மரணம் அடைந்துள்ளார்.  இவருடன் காரில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவரின் ஒரு வயதுக் குழந்தையும் அந்த விபத்தில் பரிதாபமாக உயிரழந்துள்ளது. இந்த மரணம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Tags : #RIPELRIESA #WOMENSCRICKET #ACCIDENT #DIED