'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 03, 2020 09:17 PM

ஒரு கொரோனா நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

The cost per corona patient is Rs.25,000 a day!

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவு விவரங்கள் குறித்து, கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஒரு கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக தெரிவித்துள்ளது. தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டால், அவர்களுக்கு கூடுதலாக வெண்டிலேட்டர் செலவையும் சேர்த்து ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா டெஸ்ட் செய்து, நோயை உறுதிப்படுத்த, ரூ.4,500, டெஸ்ட் கிட்டின் விலை ரூ.3,000, நோய் உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு, தினமும் ரூ.1,000 மதிப்புள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

கொரோனா நோயாளி வென்டிலேட்டர் வசதியுடன் ஐ.சி.யூ., வார்டுக்கு மாற்றப்பட்டால், நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 25,000 வரை கூடுதலாக செலவாகிறது.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு உடை ஒன்றுக்கு ரூ.500 முதல் 600 வரை தேவைப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்குப் பிறகும், இந்த உடைகள் மாற்றப்படுகிறது. அணிந்த உடைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அப்படி, ஐ.சி.யூ., வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், நாள் ஒன்றுக்கு, 200 பாதுகாப்பு உடைகள் தேவைப்படுகின்றன.

நோயாளிகளுக்கு நோய எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில் சத்தான உணவு வகைகள், சக்தி கொடுக்கும் பானங்கள் என அடிக்கடி கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு நோயாளிக்கு 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை  செலவை அரசே மேற்கொள்கிறது.

Tags : #CORONA #KERALA #PER DAY #25 THOUSAND