“குப்பைமேட்டில் குப்பைகளோடு கிடந்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆதார் அட்டைகள்”!.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 16, 2019 05:57 PM

திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றோரம் வீசப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

aadhaar card is dropped in the dustbin near the river in thiruvarur

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் கிடந்துள்ளது. இதனை கண்ட சிலர் மூட்டைகளை கீழே கொட்டி பார்த்த போது அதில் இருந்து ஏராளமான ஆதார் அட்டைகள் விழுந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும், ஆதார் அட்டைகளில் சுற்றுவட்டாரப் பகுதியினரின் முகவரிகள் உள்ளன. இந்நிலையில், அவை போலி ஆதார் அட்டைகளா என விசாரணை நடத்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ராஜன்பாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

Tags : #THIRUVARUR #AADHAAR CARD