ஏதோ 'சொந்த வண்டியை' எடுத்துச் செல்வது போல... 'கெத்தா... ஸ்டைலா'... கள்ளச்சாவி போட்டு வண்டியை ஓட்டிச் சென்ற 'டீசன்ட் திருடர்ர்ர்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சியில் வங்கி முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
அடுத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒருவன் சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துவிட்டு, யாரும் கவனிக்காத நேரத்தில், தான் வைத்திருந்த திருட்டு சாவியை எடுத்து வண்டியின் சைடு லாக்கை திறந்துள்ளான். அதன்பிறகு மீண்டும் சுற்றிப் பார்த்து விட்டு வண்டியின் மெயின் லாக்கை திறந்துள்ளான்.
அதன் பிறகு தனது சொந்த வாகனத்தை எடுத்துச் செல்வது போல் ஸ்டைலாக தலையில் ஒரு கேப்பை மாட்டிக் கொண்டு வண்டியில் ஏறி நிதானமாக அங்கிருந்து சென்றான். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதுகவ்வும் படத்தில் வருவது போல், அடிதடி, வன்முறை கூடாது, அதிகாரத்தில் கை வைக்கக் கூடாது, திருடப்படுபவர் அதிகமாக பாதிக்கக் கூடாது போன்ற கொள்கைகளை முறைப்படி கடைப்பிடித்து திருடிச் சென்ற அந்த மர்ம நபர் விரைவில் போலீசாரிடம் பிடிபட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
