24 மணிநேரத்தில் உருவாகும் ‘கான்கிரீட் வீடு’.. என்னங்க சொல்றீங்க..? ஆச்சரியத்தில் உறைந்த ‘பொள்ளாச்சி’ மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சியில் 24 மணிநேரத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு குறைபட்சம் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகின்றன. பேஸ்மட்டம், சுற்றுச்சுவர், கான்கிரீட் ஸ்லாப் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பிரிகாஸ்ட் கான்கிரீட் ஸ்லாப் (Precast Concrete Slabs) என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 24 மணிநேரத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு பொள்ளாச்சி பொறியாளர்கள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையம், கோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. கோவையில் உள்ள வேலன் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் கட்டிடத்திற்கான வரைபடத்தை தயாரித்து, பிரிகாஸ்ட் ஸ்லாப் தொழில் நுட்பத்தில் ராட்சத ஸ்லாப்புகளை தயார் செய்து கட்டிடங்களை அமைத்து வருகின்றனர்.
இந்த பிரிகாஸ்ட் ஸ்லாப் தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் வீடுகளை சில ஆண்டுகளுக்கு பிறகு வேறு இடத்துக்கு கொண்டு சென்று அமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் காலியாக இருந்த இடத்தில் மாலைக்குள் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு வருவதை அப்பகுதிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தில் வீடுகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.