"தனியா இருந்த அப்பா எங்க காணாம போய்ட்டாரு?".. தேடிய மகன்.. தோட்டத்துக்கு நடுவே.. "ஒண்ணர அடி குழிக்குள்ள".. குலை நடுங்க வைத்த பயங்கரம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் தனியாக இருந்த தந்தை, திடீரென காணாமல் போன நிலையில், தேடி பார்த்த மகனுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே அமைந்துள்ளது புதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது வயது 50.
மேலும் புதூர் கிராமத்தில் உள்ள இவரது வீட்டில் தனது இரண்டு மகன்களுடன் லட்சுமணன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று வேலைக்கு சென்ற இரண்டு மகன்களும் இரவு வரை வீட்டிற்கு வராத நிலையில், லட்சுமணன் வீட்டில் தனியாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், இன்று காலை லட்சுமணன் மகனான சிவகுமார் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த தனது தந்தை வீட்டில் இல்லாததால், ஒரு நிமிடம் பதறி போயுள்ளார். இதன் பின்னர், தங்களின் வீட்டிற்கு அருகே உள்ள வெற்றிலை தோட்டத்திலும் தந்தை உள்ளாரா என அங்கே சென்று சிவகுமார் தேடி பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் சிவகுமார் கண்ட காட்சி, அவரை ஒரு நிமிடம் நடுங்க வைத்துள்ளது.
இதற்கு காரணம், அங்கே சுமார் ஒன்றரை அடி ஆழக் குழி ஒன்றில் லட்சுமணன் கொலை செய்யப்பட்டு உள்ளே உட்கார வைக்கப்பட்டு இருந்தது தான். அது மட்டுமில்லாமல், அவரை உட்கார வைத்ததிருந்த இடத்தை சுற்றி எலுமிச்சம்பழம் மற்றும் கோழிகளை அறுத்து பூஜை செய்தது தொடர்பான அடையாளங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஒரு நிமிடம் அதிர்ந்து போன சிவகுமார் உடனடியாக கெலமங்கலம் போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தகவலை தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார், பூஜைகள் செய்தது போல அங்கே பொருள்கள் இருந்ததால் யாராவது லட்சுமணனை நரபலி கொடுத்திருப்பாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல லட்சுமணின் உடலைக் கைப்பற்றி போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையையும் நடத்தி வருகின்றனர். மகன்கள் வீட்டுக்கு வராத நிலையில், தனியாக வீட்டில் இருந்த தந்தை உட்கார வைக்கப்பட்ட நிலையில், இறந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
