கூட்டத்துல தந்தையை தொலைத்த மகன்.. கண்ணீர்விட்ட சிறுவனுக்காக ஒன்று திரண்ட மக்கள்.. வாவ் சொல்லவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்கூட்டத்தில் தந்தையை தொலைத்த சிறுவனுக்கு உதவி செய்ய மொத்த மக்களும் களத்தில் இறங்கிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நெரிசல்
பொதுவாக கூட்டமான பகுதிகளில் குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்வது அசாதாரணமான செயலாகும். திக்கெங்கும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் குழந்தைகளை கவனமாக கையில் பிடித்துக்கொள்வதே சிறந்தது. ஏனெனில் நெரிசலான இடங்களில் குழந்தைகளை தொலைந்துவிட்டால் அவர்களை மீண்டும் கண்டுபிடிப்பது ரொம்பவே சிரமமான காரியம் ஆகிவிடும். இதனாலேயே பேருந்து நிலையங்கள், அதிக மக்கள் கூடும் திருவிழா போன்ற இடங்களில் காவல்துறையினரே இதற்காக சிறப்பு மையங்களை அமைத்து மக்களுக்கு உதவி வருகின்றனர்.
தொலைந்த அப்பா
ஆனால், தற்போது சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் ஒரு சிறுவனுக்காக அந்த நகர மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர். அர்ஜென்டினாவில் உள்ள ஒருபகுதிக்கு தனது தந்தையுடன் சென்றிருக்கிறான் ஒரு சிறுவன். அப்போது திடீரென தனது தந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் கதறி அழுகவே அங்கிருந்த மக்கள் என்ன நடந்தது என சிறுவனிடம் கேட்டிருக்கிறார்கள்.
சிறுவனும் தனது தந்தையை காணவில்லை எனக் கூறியிருக்கிறான். இதனையடுத்து ஒருவர் அந்த சிறுவனை தனது தோள் மீது ஏற்றி அமரவைத்திருக்கிறார். தந்தையை கண்டுபிடிக்க அங்கும் இங்கும் தேடிய அந்த சிறுவன் தந்தை கிடைக்காததால் மேலும், அழுகவே அங்கிருந்த அனைவரும் சோகமடைந்தனர். இதனையடுத்து அனைவரும் சிறுவனின் தந்தை பெயரான Eduardo என்பதை உரக்க கத்த துவங்கினர். மேலும், அங்கிருந்த இசைக்குழுவினரும் Eduardo என சத்தமாக குரல் எழுப்பினர்.
நெகிழவைக்கும் வீடியோ
இதன் பலனாக அந்த சிறுவனின் தந்தை கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் தனது மகனை தேடிக்கொண்டு அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். காணாமல்போன தனது தந்தையை மீண்டும் கண்ட மகிழ்ச்சியில் அந்த சிறுவன் ஓடிச்சென்று அவரை இறுக்கமாக கட்டியணைக்க அனைவரும் கைதட்டி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவை இதுவரையில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கின்றனர். மேலும், மனிதாபிமான அடிப்படையில் சிறுவனுக்காக ஒன்றிணைந்த மக்களையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Also Read | சார்ஜில் கிடந்த போன்.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்.. பதறிப்போன குடும்பத்தினர்..!

மற்ற செய்திகள்
