Naane Varuven D Logo Top

நடனமாடும்போது மயங்கி விழுந்த மகன்.. மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற அப்பா.. கொஞ்ச நேரத்துல மொத்த குடும்பமும் நிலைகுலைஞ்சு போய்டுச்சு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 03, 2022 08:14 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் மகன் மரணமடைந்த செய்தியை கேட்ட தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உள்ளூர் மக்களை சோகத்தில் ஆழத்தியிருக்கிறது.

Man dies when dancing garba father also dies after hearing the news

Also Read | திடீர்னு வானத்தில் தோன்றிய டிராகன்.. ஒருநிமிஷம் ஆடிப்போன மக்கள்.. அப்பறம் தான் விவரமே தெரிஞ்சிருக்கு.. வைரலாகும் வீடியோ..!

கர்பா

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நாட்களில் மக்கள் ஒன்றாக சேர்ந்து கர்பா எனப்படும் நடனத்தை ஆடுவது வழக்கம். அப்படி, மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார் மனிஷ் நாராப்ஜி சோனிக்ரா. இவருடைய வயது 35 ஆகும். இவருடைய தந்தை நாராப்ஜி சோனிக்ராவும் உடன் சென்றிருக்கிறார்.

Man dies while dancing at garba father also dies after hearing the new

விரார் பகுதியில் உள்ள குளோபல் சிட்டி காம்ப்ளெக்சில் கர்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களோடு இணைந்து நடனமாடத் துவங்கிய மனிஷ். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழவே, அங்கிருந்தவர்கள் பதறிப்போய் அவரை தூக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர் வாந்தி எடுக்கவே, அவரது தந்தை மற்றும் மூத்த சகோதரர் ராகுல் ஆகிய இருவரும் மணீஷை அருகில் உள்ள சஞ்சீவினி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சோகம்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். மருத்துவர்கள் இதை சொல்லியபோது இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நாராப்ஜி சோனிக்ராவும் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். உடனடியாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மகனுடைய இறப்புச் செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், இருவரது உடலையும் கைப்பற்றியுள்ள போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்த விசாரணை நடைபெற்றுவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Man dies while dancing at garba father also dies after hearing the new

முன்னதாக, நேற்று குஜராத் மாநிலத்திலும் 21 வயதான இளைஞர் ஒருவர் கர்பா நடனமாடுகையில் மாரடைப்பார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரேந்திர சிங் ரமேஷ் பாய் ராஜ்புத். இவர் உள்ளூரில் நடைபெற்ற கர்பா விழாவில் கலந்துகொண்டு நடனமாடும் போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | 50 வயசானவங்க இந்த டெஸ்ட்-ல பாஸ் பண்ணவே முடியாதாம்.. ஆனந்த் மஹிந்திராவின் லேட்டஸ்ட் ட்வீட்.. இத வாசிச்சிட்டா நீங்க கில்லாடிதான்..!

Tags : #MAHARASHTRA #GARBA #FATHER #DANCING #MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man dies when dancing garba father also dies after hearing the news | India News.