"இது தான் அப்பா, பொண்ணு GOALS போல".. ஒரே நாளில் மகளுடன் வழக்கறிஞராக பதிவு செய்த தந்தை.. நெகிழ வைத்த பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில், தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் ஒரே நாளில் செய்துள்ள நிகழ்வு தொடர்பான செய்தி, தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள கக்காட் என்னும் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருக்கு தற்போது 61 வயதாகிறது.
முன்னதாக சிறு வயதில் இருந்தே வழக்கறிஞர் ஆக வேண்டும் என கனவு கண்டுள்ளார் சுரேந்திரன். பள்ளியில் படிக்கும் போது கூட, பள்ளி ஆசிரியர்கள் சட்டம் படிக்க அவரை ஊக்கப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்கு மத்தியில், கல்லூரி படிப்பை முடித்த சுரேந்திரன், தனது ஆரம்ப காலத்தில் கல்லூரி ஆசிரியராக இருந்துள்ளார். இதன் பின்னர், கூட்டுறவு வங்கியில் எழுத்தராக வேலை பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் இருந்து பணி ஓய்வும் பெற்றுள்ளார் சுரேந்திரன்.
அந்த சமயத்தில், சுரேந்திரனின் இரண்டாவது மகளான அனன்யா, சட்டக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். சிறு வயதில் இருந்தே வழக்கறிஞராக வேண்டுமென்ற விருப்பம், சுரேந்திரனுக்கு இருந்ததால், தற்போது ஓய்வும் பெற்று விட்டதன் காரணமாக, கனவை நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளார். அதன் படி, மகள் அனன்யா படிக்கும் கல்லூரியிலேயே சட்டம் படிக்க சுரேந்திரன் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தந்தை மற்றும் மகள் என இருவரும் தற்போது ஒரே நாளில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர். இந்த விஷயம், சுரேந்திரனின் மனைவி ராதா லெட்சுமி, அவரது மூத்த மகள் அம்ரிதா உட்பட அனைவரையும் கடும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், சுரேந்திரன் மற்றும் அனன்யா ஆகிய இருவரையும் அவர்கள் உடனிருந்து ஊக்குவிக்கவும் செய்ததாக சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை மற்றும் மகள் என இருவரும் வழக்கறிஞர் உடையில் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | 6 பேர் உயிரைக் காப்பாற்றிய 'Alexa'.. நள்ளிரவில் கொடுத்த எச்சரிக்கை.. அப்படி என்ன செஞ்சுது?

மற்ற செய்திகள்
