"சபாஷ்".. ஒரே நேரத்துல 3 பேரும் 'செலக்ட்'.. காவல் துறையில் தேர்வாகி பட்டையை கிளப்பிய சகோதரிகள்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உடன் பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே சமயத்தில் சாதித்துக் காட்டியுள்ள விஷயம் தொடர்பான செய்தி, தற்போது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பொதுவாக, நாம் சோஷியல் மீடியாக்களில் அதிக நேரத்தை செலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அப்படி நாம் தெரிய வரும் விஷயங்களில் பலவும் மனதுக்கு நெருக்கமான வகையில் ஒருவித தாக்கத்தை உருவாக்கும் வகையிலும் இருக்கும்.
அது மட்டுமில்லாமல், துவண்டு போய் கிடக்கும் போது ஒருவித எனர்ஜியை நம்மில் கடத்தவும் கூட சில நிஜ செய்திகள் வழி செய்யும். அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் வெங்கடேசன் - ஷகிலா தம்பதியினர். இவர்களுக்கு வைஷ்ணவி, நிரஞ்சனி, ப்ரீத்தி என மொத்தம் மூன்று மகள்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் காவலர் தேர்வுக்கு தேர்வாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வைஷ்ணவி, நிரஞ்சனி மற்றும் ப்ரீத்தி ஆகிய மூன்று சகோதரிகளும் திருவள்ளூரில் காவல் பயிற்சியை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல, விரைவில் அவர்கள் காவலர் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.
அக்கா தங்கைகள் மூவரும் ஒரே நேரத்தில் தமிழக காவல்துறையில் சேர உள்ளதை அந்த கிராம மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், பொது மக்கள் கூட மூன்று சகோதரிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
