வலியோடு 2 வருஷம் வெளிநாட்டில்.. பெற்ற மகள்களை முதல்முறை நேரில் பார்த்த தந்தை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாட்டில் இருந்து திரும்பிவரும் தந்தை ஒருவர் தனது குழந்தைகளை முதன்முறை பார்க்கும் வீடியோ ஒன்று பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

கொரோனா
கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. அதேவேளையில் உலகளவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக வெளிநாடுகளில் வேலைபார்த்துவந்த இந்தியர்கள் பலர் சொந்த நாடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
வெளிநாட்டு வேலை
விமான பயணங்களுக்கு உலக நாடுகள் விதித்த தடை காரணமாக குடும்பங்களை பிரிந்து, ஆண்டுக்கணக்கில் இந்த வெளிநாட்டு பணியாளர்கள் வெவ்வேறு நாடுகளில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. அந்த வகையில் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் தந்தை ஒருவர் 2 வருடங்கள் கழித்து முதன்முறையாக தாயகம் திரும்புகிறார். அவரை வரவேற்க அவருடைய 3 மகள்களும் கையில் 'வெல்கம் டாடி' என எழுதிய பதாகைகளை வைத்திருக்கிறார்கள்.
இந்த குழந்தைகளின் தாய் உருக்கமான செய்தி ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர், கணவர் வெளிநாடு சென்றபோது தனக்கு மிகுந்த வருத்தமாக இருந்ததாகவும், ஆனால், நல்ல வேலை என்பதால் தன்னுடைய கவலைகளை அடக்கிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கணவர் சென்ற பிறகு மிகுந்த தனிமை உணர்ச்சியில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாலும் கணவர் உடன் இல்லாதது வலியை தந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
3 குழந்தைகள்
பிரசவ காலத்தில் மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டு துணிச்சலுடன் 3 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் இந்த தாய். உடன் இருந்த அனைவரும் தந்தை வரவில்லையா? எனக்கேட்ட போதெல்லாம் மனதுக்கு கஷ்டமாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார் இவர். இந்நிலையில், தனது கணவரை வரவேற்க மகள்களுடன் விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் அவர். கையில் பைகளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தந்தை, இத்தனை நாட்கள் வீடியோ காலில் மட்டுமே பார்த்த தனது குழந்தைகளை வாஞ்சையுடன் அணைத்துக்கொள்ளும் இந்த வீடியோ காண்போரை நெகிழ வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
