நிறைந்து வழிந்த திருப்பதி உண்டியல்.. பணத்தை எண்ணியே டயர்டு ஆன அதிகாரிகள்.. கடைசி 10 மாத வருமான இவ்ளோவா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி கோவில் உண்டியலில் காணிக்கையாக கடந்த 10 மாதங்களில் 1200 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகில் மிகவும் பணக்கார கோவிலாக கருதப்படுகிறது திருப்பதி. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கோவிலுக்கு கணிசமான அளவில் பக்தர்கள் நன்கொடையும் அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த 8 மாதங்களாக திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் தொடர்ந்து 100 கோடிக்கும் அதிகமாக கிடைத்திருக்கிறது. கடந்த மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மக்கள் காணிக்கை செலுத்தி இருக்கின்றனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் முறையே 139 கோடியே 75 லட்ச ரூபாய் மற்றும் 140 கோடியே 34 லட்ச ரூபாய் வருமானமாக கிடைத்திருக்கிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) திருப்பதி கோவிலுக்கு உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் 122 கோடியே 19 லட்ச ரூபாய் ஆகும். அந்த வகையில் கடந்த 10 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த காணிக்கை மட்டும் 1192 கோடியே 81 லட்ச ரூபாய் ஆகும்.
இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மட்டுமே கோவில் உண்டியல் வருமானம் ரூ. 100 கோடிக்கும் குறைவாக இருந்தது. இதனையடுத்து, மார்ச் முதல் இந்த நிலைமை மாறி மாதந்தோறும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
