"BLOOD ரிப்போர்ட்ல கூட COMPARISON-ஆ??".. அலப்பறை அப்பாவின் வாட்சாப் 'மெசேஜ்'.. மகளின் வைரல் ரியாக்ஷன் 😂
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவை சேர்ந்த தந்தை மற்றும் மகள் இடையே நடந்த உரையாடல் தொடர்பாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வரும் நிலையில், பலரையும் சிரிப்பு மழையில் இது நனைய வைத்துள்ளது.

பொதுவாக, தந்தை மற்றும் மகள் இடையே உள்ள அன்பின் பிணைப்பு என்பது சற்று அதிகமாக தான் இருக்கும். மாறி மாறி பாசம் காட்டுவதாகட்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதாகட்டும், தந்தை - மகளுக்கு நிகர் அவர்கள் தான்.
அப்படி இருக்கையில், ,தனது மகளை தந்தை ஒருவர் ரோஸ்ட் செய்ததாக சோஷியல் மீடியாவில் வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த ஸ்க்ரீன் ஷாட்டில், தந்தை தனது மகளிடம், "உன்னுடைய மற்றும் உனது தோழியின் ரத்த ரிப்போர்ட்டை வாங்கி விட்டேன்" என மெசேஜ் அனுப்பி உள்ளார். மகளும் பதிலுக்கு, 'ஓகே' என அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து, சற்றும் தாமதிக்காமல் மெசேஜ் செய்த அந்த தந்தை, "ரத்த வகை ரிப்போர்ட்டில் கூட உனது தோழி A+ பெற்றுள்ளார். ஆனால், உனக்கு B- தான் வந்திருக்கிறது" என கிரேட் முறையை மகளின் ரத்த க்ரூப்புடன் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.
பதிலுக்கு மகளும் "அப்பா, ப்ளீஸ்" என சொல்கிறார். படிப்பில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாண்டி, தற்போது ரத்த க்ரூப்பில் கூட இப்படி கிண்டலடித்த தந்தையின் மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. "தந்தையை விட யாரும் சிறப்பாக ரோஸ்ட் செய்து விட முடியாது" என கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பலரும் பல விதமான கருத்துக்களை இதுகுறித்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில், ஸ்க்ரீன் ஷாட் என்பதால் ஒரு வேளை மீம்ஸாக பகிரப்பட்டதாக கூட இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், மகளை இப்படி கூட ஜாலியாக ரோஸ்ட் செய்ய முடியும் என இந்த தந்தை நிரூபித்துள்ளார் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
