'மிருகமாக மாறிய கல்லூரி மாணவர்கள்'...'கொலைவெறித் தாக்குதல்'... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 29, 2019 09:46 AM

கல்லூரி மாணவன் ஒருவரை அவரது சக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.

Clash between Anantapur Arts college students

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் அரசு கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரு மாணவ கோஷ்டிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த பகை அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் தக்க சமயம் பார்த்து இரு கோஷ்டியினரும் காத்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், கல்லூரி மைதானத்தில் இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது சிவய்யா என்ற மாணவரை எதிர் கோஷ்டியினர் சேர்ந்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவர் மயங்கி விழுந்த நிலையிலும் எதிர் கோஷ்டியினை சேர்ந்த மாணவர்கள்  சிவய்யா மீது ஏறி நின்று மிதித்தும், கொடூரமாக ஆயுதங்களை கொண்டும் தாக்கியுள்ளனர்.

இதனிடையே இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவர் சிவய்யா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாணவர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ATTACKED #COLLEGESTUDENT #COLLEGESTUDENTS #ANANTAPUR ARTS COLLEGE #CLASH #MOB ATTACK