'இளம் பெண்ணிற்கு'...' அண்ணன்களால் நேர்ந்த கொடூரம்' ...'நெஞ்சை ரணமாக்கும்' வீடியோ காட்சிகள் !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 01, 2019 03:22 PM

பட்டியலின ஆணுடன் பழகி அவருடன் சென்ற பெண்ணை, பொது வெளியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young girl Thrashed By her own family members in Madhya Pradesh

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பட்டியலின ஆணுடன் பழகியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞருடன் சென்ற அந்த பெண்ணை காணவில்லை என அவரது சகோதரர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்பு, தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதையடுத்து கடந்த ஜூன் 25ம் தேதி அன்று, அந்த பெண்ணை தர தரவென இழுத்து சென்று, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்தி, பெண்ணின் சகோதரர்கள் உட்பட அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் அடித்து துன்புறுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் அந்த பெண் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. நீளமான குச்சிகளை வைத்து அந்த பெண்ணின் முதுகு, கால் ஆகிய இடங்களில் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள், காண்போரை அதிர செய்துள்ளது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவில் உள்ள, வாகன எண்ணை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி பெண்ணின் 4 சகோதரர்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : #ATTACKED #MADHYA PRADESH #DALIT MAN #THRASHED