'அப்சொல்யூட்லி'.. 'என்னா ஒரு வரலாறு காணாத டெசிசன்'.. 'என்னோட சப்போர்ட் கண்டிப்பா உண்டு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 06, 2019 03:30 PM
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த விவகாரம் இந்திய அளவில் பலரிடையே பலவிதமான கருத்துக்களை உண்டுபண்ணியுள்ளது.
பிரிவு 370-ன் கீழ் காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டும் இருவேறு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் தெரிவித்ததோடு, ஆளும் மத்திய அரசின் சார்பில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த திடீர் முடிவுக்கும், செயலுக்கும், ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலரும் பாஜகவின் இந்த தீர்மானம் பற்றி வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில், ரேபரலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு தெரிவித்துள்ள தன்னுடைய ஆதரவு நிலைப்பாடு பெரும் அதிர்வலைகளை காங்கிரஸ் வட்டத்தில் உருவாக்கியுள்ளது.
இதுபற்றி பேசிய அதிதி சிங், ‘பாஜகவின் இந்த முடிவுக்கு என் முழு ஆதரவினை தருகிறேன். ஒரு எம்.எல்.வாக ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்க உதவும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இதை அரசியலாக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
#WATCH Aditi Singh, Congress MLA Raebareli Sadar speaks on #Article370revoked: I'm in absolute support of the decision. It will help in integrating J&K into the mainstream. It's a historic decision. It should not be politicised. As an MLA, in my capacity, I welcome this decision. pic.twitter.com/fSmzpesjnB
— ANI UP (@ANINewsUP) August 6, 2019