'இந்த' நேரத்துல என்னடா வெளாட்டு?.... 'காய்கறி' வியாபாரிக்கு நேர்ந்த 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்பகோணம் அருகே வலையப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர். இவர் கும்பகோணம் உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
![Vegetable vendor murdered by four persons in Kumbakonam Vegetable vendor murdered by four persons in Kumbakonam](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/vegetable-vendor-murdered-by-four-persons-in-kumbakonam.jpg)
பன்னீரின் உறவினர்கள் சிலர் அப்பகுதியில் இரவு நேரம் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த போது, சவுந்தர்ராஜன் என்பவர் மது அருந்தி விட்டு கேரம் போர்டு விளையாடிய இளைஞர்களிடம், 'இந்த நேரத்தில் உங்களுக்கு என்ன விளையாட்டு?' என கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த இளைஞர்கள் பன்னீரின் உறவினர்கள் சிலரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்த நிலையில், அவர்கள் சவுந்தர்ராஜனிடம் சென்று கேரம் போர்டு விளையாடிய இளைஞர்களிடம் ஏன் தகராறில் ஈடுபட்டாய் என கேட்டு முறையிட்டதாக தெரிகிறது.
அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட, அங்கு வந்த வந்த பன்னீரை சவுந்தர்ராஜனின் தரப்பில் இருந்த ஒருவர் அரிவாள் எடுத்து வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பன்னீரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பன்னீர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகராறில் மேலும் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை உருவாகியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)