'சரக்கை' சரிசமமாக பிரிப்பதில் தகராறு... 'மனைவியை' கொன்ற கணவன்... 'கணவனை' கொன்ற மனைவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (62). இவரது மனைவி பெயர் பழனாள் (57). இவர்கள் இருவருக்கும் குடி பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், மாணிக்கம் டாஸ்மாக் கடையில் இருந்து ஆறு மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது 4 மதுபாட்டில்கள் தனக்கும், 2 மதுபாட்டில் உனக்கும் என்று மாணிக்கம் கூறியுள்ளார். இதனை அவரது மனைவி பழனாள் ஏற்கவில்லை என தெரிகிறது. இதனால் இருவருக்குள்ளும் மது பாட்டில்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த மாணிக்கம், கட்டையை எடுத்து மனைவி பழனாளை தாக்கியதோடு அவரின் தலையை சுவற்றில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதே போல, செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மற்றும் ப்ரியா என்னும் தம்பதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இரவு இருவரும் ஒன்றாக மது குடித்த போது, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ப்ரியா, அண்ணாமலையை கீழே தள்ளி கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். பின், சகோதரியின் கணவர் உதவியுடன் சடலத்தை சேலத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் பரிசோதனை நடத்திய போது, கொலை என தெரிய வர, ப்ரியா மற்றும் அவரது சகோதரியின் கணவர் செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மது அருந்தும் நேரத்தில் ஏற்பட்ட தகறாரின் காரணமாக மனைவி கணவனை கொலை செய்ததும், மற்றொரு பகுதியில் மனைவி கல்லை தூக்கி போட்டு கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
