‘பட்டப்பகலில்’ அரசியல் பிரமுகர், அவரது மகன் ‘சுட்டுக்கொலை’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 20, 2020 10:18 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி அரசியல் பிரமுகரையும், அவரது மகனையும் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samajwadi party leader and son shot dead in Uttar Pradesh

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாம்சோய் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலை போடப்பட்டு வந்தது. அப்போது சாலை அமைக்கும் பணிகள் வயலை ஆக்கிரமித்து நடைபெறுவதாக கூறி வயலின் உரிமையாளர், உள்ளூர் சமாஜ்வாடி கட்சி பிரமுகரான சோட் லால் திவாகரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனை அடுத்து சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சோட் லால் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது வயலின் உரிமையாளர்கள் இருவருடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அவர்கள், சோட் லாலையும், அவரது மகன் சுனிலையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து துப்பாக்கி சுட்டுக்கொலை செய்த ஜித்தேன்ர ஷர்மா, ஷர்மேந்திர ஷர்மா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அரசியல் பிரமுகரும், அவரது மகனும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.