இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 31, 2020 10:56 AM

1. நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைப்பு. மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு.

Tamil News Important Headlines read here for more January 31

2. இந்தியாவிலேயே புனேவுக்கு அடுத்தப்படியாக சென்னையில் கொரனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

3. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

4. சீனாவில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர டெல்லியிலிருந்து மதியம் 12.30 மணிக்கு சிறப்பு விமானம் புறப்படுகிறது.

5. உலக நாடுகள் ஒன்றிணைந்து, கொரனோ பாதிப்பை தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

6. கொரனா வைரஸ் பாதித்த கேரள மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

7. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

8. 2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196 பேருக்கு வாழ்நாள் தடைவிதிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

9. முரசொலி நாளிதழ் பற்றி அபாண்டமாக பழி சுமத்தி விட்டோமே என்று பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள். ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையில் வைத்துள்ள மரியாதையினால் கேட்டுக் கொள்கிறேன் என டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

10. நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

Tags : #TOPNEWS