'சென்னை மக்களே இந்த மேம்பாலதை மறக்க முடியுமா'... '87 வருஷம் பழசு'... ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் இடிக்கப்பட்ட மேம்பாலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 11, 2020 11:47 AM

ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி, சென்னையின் பிரபல பலமான யானைக்கவுனி மேம்பாலம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.

Chennai : The age-old Elephant Gate bridge was fully demolished

கடந்த 1933-ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கட்டப்பட்ட யானைக்கவுனி மேம்பாலம் மிகவும் பழமையான பாலங்களில் ஒன்றாகும்.  இந்த மேம்பாலத்திற்கு அடியில் 8 தண்டவாளங்கள் செல்கின்றன. இதற்கிடையே சென்னை சென்டிரல் பணிமனையின் விரிவாக்கப் பணிகள், சென்டிரல் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால் இந்த பாலத்தை சீரமைத்து அகலப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்ற சூழ்நிலை உருவானது.

இதனிடையே பாழடைந்த இந்த மேம்பாலத்தை இடிக்க வேண்டுமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவையை நிறுத்தி, 72 மணி நேரம் இதற்காக செலவு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இதனால் ரெயில் சேவை மார்ச் மாதத்தில் இருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், அதனை பயன்படுத்தி தெற்கு ரெயில்வே, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு, 87 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை இடிக்கும் பணி துரிதமாக மேற்கொண்டு முடிக்கப்பட்டது.

இதே யானைக்கவுனி மேம்பாலத்தை கடந்த 2008-09-ம் ஆண்டு 43.77 கோடி ரூபாய் செலவில், மறுசீரமைக்கும் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, ‘பிங்க்’ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.