தமிழகம்: சென்னையில் 'முதல்வர் பழனிசாமி' இல்லத்தில் 'பாதுகாப்பு பணியில்' ஈடுபட்டு வந்த 'பெண் காவலருக்கு கொரோனா'?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 06, 2020 11:58 PM

சென்னையில், தமிழக முதல்வர் பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகின. 

TN CM Home Duty Female security police test Corona positive

தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா என்றும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விடுமுறையில் சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான பெண் காவலர் முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே கிரீன்வேஸ் சாலையில் பணியில் இருந்த பெண் தலைமை காவலர் அல்ல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.