VIDEO: அனைத்து 'முதல்வர்கள்' கூட்டத்தில் 'பிரதமர்' பேசியது என்ன?... வெளியான 'புதிய' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 27, 2020 11:22 PM

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது நாடு முழுவதும் 2-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வருகின்ற மே மாதம் 3-ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது. எனினும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் இன்று மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை நடத்தினார்.

PM Spoke On Spike In Coronavirus Cases In June-July: TS Singh Deo

நேரமில்லை என்பதால் 9 மாநில முதல்வர்கள் மட்டுமே இதில் பேசினர். மற்ற மாநில முதல்வர்கள் எழுத்துப்பூர்வமாக தங்களது கோரிக்கையை வழங்கியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வருடன் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிங், ''ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா எண்ணிக்கையில் உச்சம் தொட வாய்ப்புகள் இருக்கிறது. அதற்குத் தகுந்தபடி அனைத்தையும் நாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்,'' என தெரிவித்து இருக்கிறார்.

கூட்டத்தின்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும்படி பிரதமரிடம் அனைத்து மாநில முதல்வர்களும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலங்களை, ஆரஞ்ச் மண்டலங்களாகவும், ஆரஞ்ச் மண்டலங்களை பச்சை மண்டலங்களாக மாற்றும்படி அனைத்து மாநில முதல்வர்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.